ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தயாராகிறது சர்தார் 2.. ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு!

தயாராகிறது சர்தார் 2.. ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு!

 சர்தார் படக்குழு

சர்தார் படக்குழு

நாட்டுக்காக தியாகம் செய்யும் விஷயங்கள் சமீபமாக திரைப்படங்களில் இடம்பெறுவது இல்லை என நடிகர் கார்த்தி கூறியுள்ளார். 

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்தார் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

சர்தார் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி, இயக்குனர் மித்ரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்,  தயாரிப்பாளர் லட்சுமணன்,  ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ், எடிட்டர் ரூபன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.

அதில் பேசிய இயக்குனர் மித்ரன், சர்தார் திரைப்படம் எழுத நினைத்தபோது எந்த தயக்கமும், பயமும் இல்லை சரியான ஒரு கதையைக் கொண்டு சேர்க்கிறோம் என்ற நம்பிக்கை தோன்றியதாக தெரிவித்தார்.  அதேபோல் தயாரிப்பு நிறுவனம் தனக்கு எந்த விதமான அழுத்தத்தையும் கொடுக்காமல், முழு நம்பிக்கை வைத்து படத்தை உருவாக்கினார்கள் எனவும் கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, நாட்டிற்காக தியாகம் செய்யும் படங்கள் சமீபத்தில் வரவில்லை.  இதில் இடம்பெற்ற சர்தார் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் பொழுது பெருமையாக இருந்தது.  நாட்டுக்காக தன்னை சார்ந்த அனைத்தையும் ஒருவன் தியாகம் செய்வது என்பது மிகப்பெரிய விஷயம். அதை செய்யும் சர்தார் கதாபாத்திரம் தனக்கு நெருக்கமாக இருந்ததாகவும் பெருமிதம்கொண்டார்.

மேலும் இந்தப் படத்தின் கதையை எளிதில் சொல்லி விடலாம்.  ஆனால் எடுக்க முடியாது. அந்த அளவிற்கு நுணுக்கமான படம் சர்தார் அதை சிறப்பாக செய்து முடித்தார் என இயக்குநர் மித்ரனை  பாராட்டினார் கார்த்தி.

Also read... தேவர் மகன் தமிழ் சினிமாவின் காட்ஃபாதர்

அதேசமயம் இந்தப் படத்தின் கதையை கேட்ட பிறகு, தான் எங்கு சென்றாலும் 10 லிட்டர் சில்வர் கேனில் தண்ணீர் எடுத்து செல்ல தொடங்கிவிட்டேன் எனவும் கூறினார்.

கார்த்தியை போல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், இயக்குநர் மித்ரனுடன் பணிபுரிந்தது மிக சிறந்த அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். மேலும் எந்த இடத்தில், என்ன இசை வேண்டும் என்பதை தெளிவாக கேட்டு பெற்றுக் கொள்வார் எனவும் பாராட்டினார்.

அதேசமயம் இந்த திரைப்படத்தில் பல பாடல்களை உருவாக்கிய பின் அதை தவிர்த்து விட்டு, வேறு பாடல்களை உருவாக்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக சர்தார் திரைப்படத்தில் இடம் பெற்ற ஏறு மயிலேறி பாடலை நடிகர் கார்த்தி ஏழு மணி நேரம் பாடினார் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில், சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi