ராம் சரண் படத்தில் ஷங்கருடன் கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஷங்கர்

பீட்சா, ஜிகர்தண்டா படங்கள் தவிர்த்து கார்த்திக் சுப்புராஜின் எல்லா படமும் சுமார் ரகம்தான்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ராம் சரண் நடிக்கும் பான் - இந்தியா திரைப்படத்தை ஷங்கர் அடுத்து இயக்குகிறார். இந்தப் படத்தில் கார்த்திக் சுப்புராஜும் பணிபுரிவதாக தகவல்கள் கூறுகின்றன. 

லைகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தியன் 2 படத்தை பாதியில் விட்டு, ராம் சரணை வைத்து அரசியல் படமொன்றை இயக்குகிறார் ஷங்கர். தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறார். கியாரா அத்வானி நாயகி. முதல்முறையாக ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் படத்தின் திரைக்கதையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் பங்களிப்பு செலுத்தியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சுஜாதாவின் மறைவிற்குப் பிறகு சரியான எழுத்தாளர் அமையால் மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் திண்டாடி வருகின்றனர். சுஜாதாவுக்குப் பதிலாக ஜெயமோகனை பயன்படுத்திப் பார்த்தனர். ஆனால், தேறவில்லை. இந்நிலையில், ராம் சரண் படத்தின் திரைக்கதையில் கார்த்திக் சுப்புராஜை பயன்படுத்தியிருக்கிறார் ஷங்கர்

Also read... அஜித்தின் வலிமையால் முடங்கிய சிரஞ்சீவி படம்...!

பீட்சா, ஜிகர்தண்டா படங்கள் தவிர்த்து கார்த்திக் சுப்புராஜின் எல்லா படமும் சுமார் ரகம்தான். கடைசியாக வெளியான ஜகமே தந்திரம், பீட்சா எடுத்த இயக்குனரா இவர் என்று கேட்க வைத்தது. அப்படிப்பட்டவர்தான் இப்போது ஷங்கரின் திரைக்கதைக்கு உதவி செய்திருக்கிறார். சினிமாவில் எழுத்தாளர் பஞ்சம் எந்தளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
Published by:Vinothini Aandisamy
First published: