கார்த்திக் சுப்புராஜ் - வைபவ் கூட்டணியின் பபூன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

கார்த்திக் சுப்புராஜ் - வைபவ் கூட்டணியின் பபூன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

வைபவின் பபூன் ஃபர்ஸ்ட் லுக்

வைபவ் நடித்திருக்கும் படத்துக்கு ‘பபூன்’ என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தை அடுத்து விக்ரம் - துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படம் தற்காலிகமாக ‘சியான் 60’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. லலித்குமார் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தற்போது சியான் 60 படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக தடம் பதித்துவிட்ட கார்த்திக் சுப்புராஜ் ‘ஸ்டோன் பெஞ்ச்’ என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். மேயாத மான், பெண்குயின் ஆகிய திரைப்படங்கள் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘பூமிகா’ படத்தையும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘பூமிகா’ படத்துக்குப் பிறகு வைபவ் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரித்து வந்தார் கார்த்திக் சுப்புராஜ். இத்திரைப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அசோக் வீரப்பன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசைமைக்கும் இந்தப் படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.இந்நிலையில் இன்று இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘பபூன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கவுதம் மேனன், வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் ஆகியோர் தஙகளது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: