விக்ரம்-துருவ் விக்ரம் படம் - அட்டகாச அப்டேட்டை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

துருவ் - விக்ரம்

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்ட படங்களில் இந்தப் படமும் ஒன்று.

  • Share this:
    இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் முதல்முறையாக இணைந்து நடிப்பதை அனைவரும் அறிவோம். தற்போது இந்த ஆக்ஷன் த்ரில்லர் குறித்த, புதிய அப்டேட்டை கார்த்திக் சுப்பாராஜ் வெளியிட்டுள்ளார்.

    ஜகமே தந்திரம் படம் முடிந்ததும் கார்த்திக் சுப்பாராஜ் விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கினார். அப்பாவும், மகனும் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இது விக்ரமின் 60 வது படமும்கூட. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்ட படங்களில் இந்தப் படமும் ஒன்று.

    ஜுன் 18-ம் தேதி கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் வெளியாகிறது. கொரோனா தொற்றும் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கு விரைவில் விலக்கிக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விக்ரம் படம் குறித்த அப்டேட்டை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும், ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பின் படப்பிடிப்பை தொடங்கவிருப்பதாகவும், முதலில் விக்ரம், வாணி போஜன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்தப் படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். முதலில் அனிருத் இசையமைப்பதாக அறிவித்து, பாதியில் அவரை மாற்றி சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: