‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ் பற்றி கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த அப்டேட்

ஜகமே தந்திரம் பட போஸ்டர்

‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ் தொடர்பான கேள்விக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளார்.

 • Share this:
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது.

  தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதல்முறை இணைவதால் இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதை உறுதிபடுத்தும் விதமாக மோஷன் போஸ்டர், சிங்கிள் டிராக் என இப்படத்தின் அத்தனை முன்னோட்டங்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

  ஊரடங்கு காலத்தில் இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தியேட்டர் வெளியீட்டில் படக்குழு உறுதியாக இருக்கிறது. இந்நிலையில் ஜகமே தந்திரம் ரிலீஸ் குறித்து பேசியிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “இந்த மாதத்தின் இறுதியில் திரையரங்குகள் திறக்கப்பட்டால் அது திரைத்துறையினருக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். ‘ஜகமே தந்திரம்’ ரிலீசைப் பொறுத்தவரை அது தயாரிப்பாளரின் கைகளில் தான் இருக்கிறது.” என்றார்.

  ‘ஜகமே தந்திரம்’ படத்தை முடித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் உள்ளிட்டோருடன் ஆந்தாலஜி திரைப்படத்தில் இணைந்து ‘மிராக்கிள்’ என்ற கதையை இயக்கியுள்ளார். இது பாபி சிம்ஹாவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
  Published by:Sheik Hanifah
  First published: