தலைவர், தல என்று பேசி அஜித் ரசிகர்களிடம் சிக்கிய கார்த்திக் சுப்புராஜ்!

தலைவர், தல என்று பேசி அஜித் ரசிகர்களிடம் சிக்கிய கார்த்திக் சுப்புராஜ்!
ரஜினிகாந்துடன் கார்த்திக் சுப்புராஜ்
  • News18
  • Last Updated: April 15, 2019, 7:08 PM IST
  • Share this:
தலைவர், தல ஆட்டம் என்று பேசி அஜித் ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

பீட்ஸா, ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வந்த கார்த்திக் சுப்புராஜ், கடைசியாக ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட படத்தை இயக்கினார்.

ரஜினிகாந்த், நவாசுதீன் சித்திக், விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பேட்ட படம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதேவேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியும் நேற்று நடைபெற்றது.இதைமையப்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அதில், “தலைவர் மற்றும் ‘தல’ஆட்டம் ஒரே நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. தலைவரும் தல தோனியும் எப்போதுமே ஜாம்பவான்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அதில் தோனியை ‘தல’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Loading...
இந்த ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள், பேட்ட படத்துடன் வெளியான விஸ்வாசம் படத்தின் வசூலோடு ஒப்பிட்டு யார் சிறந்தவர்கள் என்று பட்டியலிட்டு வருகின்றனர். மேலும் ஒருசிலர் ஆபாசமாக வசைபாடத் தொடங்கியுள்ளனர்.

விஜய் தயாரிக்கும் முதல் படம்... ஹீரோயினாகும் வாணி போஜன்...!சீமானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த ராகவா லாரன்ஸ்... என்ன பிரச்னை - வீடியோ


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...