ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Shankar - Karthik Subburaj: ஷங்கர் படத்தில் இணையும் கார்த்திக் சுப்புராஜ்?

Shankar - Karthik Subburaj: ஷங்கர் படத்தில் இணையும் கார்த்திக் சுப்புராஜ்?

கார்த்திக் சுப்புராஜ் - ஷங்கர்

கார்த்திக் சுப்புராஜ் - ஷங்கர்

அந்நியன் படத்தை அவர் இந்தியில் ரீமேக் செய்யும் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இயக்குநர் ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால், அதை தள்ளி வைத்து விட்டு வேறு படங்களை இயக்கத் தயாராகி விட்டார் இயக்குநர் ஷங்கர். அந்நியன் படத்தை அவர் இந்தியில் ரீமேக் செய்யும் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார். அதோடு ராம்சரணை வைத்து தெலுங்கிலும் ஒரு படம் இயக்குகிறார்.

  இந்நிலையில் அந்த தெலுங்கு படத்துக்கு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளாராம். விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ், ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கினார். ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து ஷங்கர் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் செய்தி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vijay Sethupathi, Kamal Haasan