ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மதுரையில் பூஜையுடன் தொடங்கும் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2!

மதுரையில் பூஜையுடன் தொடங்கும் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2!

ஜிகர்தண்டா 2

ஜிகர்தண்டா 2

'ஜிகர்தண்டா' என்ற கேங்ஸ்டர் திரைப்படம், இயக்குனராக ஆசைப்படும் ஒரு இளைஞனின் கதையைச் சொல்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2 படம் வரும் 11-ம் தேதி மதுரையில் பூஜையுடன் தொடங்குகிறது.

கார்த்திக் சுப்பராஜ் 2014-ஆம் ஆண்டு 'ஜிகர்தண்டா' என்ற சுவாரஸ்யமான ஆக்‌ஷன் - நகைச்சுவை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் வில்லனாக நடித்ததற்காக பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது 'ஜிகர்தண்டா 2' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளார். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. இப்போது, 'ஜிகர்தண்டா 2' மதுரையில் இந்த வார இறுதியில் தொடங்கும் என்று சமீபத்திய செய்தி தெரிவிக்கிறது. முதல் பாகத்தைப் போலவே இதன் இரண்டாம் பாகமும் மதுரை பின்னணியில் உருவாகும் என்பதால் படத்தின் பூஜையை மதுரையில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த பூஜை டிசம்பர் 11-ம் தேதி நடக்கும் என்று கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, மலையாள நடிகை நிமிஷா சஜயன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். 'ஜிகர்தண்டா 2' படத்தின் படப்பிடிப்பு பூஜை முடிந்தவுடன் மதுரையில் தொடங்கும். அதோடு படத்தின் முதல் ஷெட்யூல் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிகர்தண்டா 2 படத்தின் பெரும்பகுதி மதுரையில் படமாக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டின் வேறு சில இடங்களிலும் படப்பிடிப்பு நடைப்பெற உள்ளது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய படங்கள்!

'ஜிகர்தண்டா' என்ற கேங்ஸ்டர் திரைப்படம், இயக்குனராக ஆசைப்படும் ஒரு இளைஞனின் கதையைச் சொல்கிறது. ஒரு கேங்ஸ்டரின் நிஜ வாழ்க்கைக் கதையைப் படமாக்க மதுரைக்குச் செல்லும் அவன் ஜெயித்தானா என்பதே கதை. ஆனால், தற்போது உருவாகும் ஜிகர்தண்டா 2, 2014-ம் ஆண்டு வெளியான படத்தின் தொடர்ச்சியா அல்லது புதிய படமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Karthik subbaraj