• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’கல்லூரி படிப்பை கை விட்டதற்கு கார்த்திக் சுப்புராஜ் தான் காரணம்’ - மனம் திறந்த பிரபல இயக்குநர்

’கல்லூரி படிப்பை கை விட்டதற்கு கார்த்திக் சுப்புராஜ் தான் காரணம்’ - மனம் திறந்த பிரபல இயக்குநர்

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ்

’பொட்டிக்கடை பழனி’ காட்சியை பார்த்த பின்னர் தான், தனக்குள் இயக்குநர் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாக கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நான் கல்லூரி படிப்பை கை விட்டதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் காரணம் என இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் கார்த்திக் நரேன் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ’துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படத்தை இயக்கினார். த்ரில்லர் படமாக உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதோடு இளம் இயக்குநரான கார்த்திக்கை பற்றி பேச வைத்தது. இதையடுத்து அவர் நரகாசூரன் திரைப்படத்தை இயக்கினார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடித்துள்ள இந்தப் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. அதோடு அருண் விஜய்யின் மாஃபியா படத்தையும் இயக்கியிருந்தார்.

    Karthik Subbaraj is the reason for Karthick Naren's college discontinue, karthik subbaraj, director karthik subbaraj, karthik subbaraj age, karthik subbaraj father, karthik subbaraj wife, karthik subbaraj instagram, karthik subbaraj upcoming movies, karthik subbaraj salary, karthik subbaraj net worth, கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் சுப்பராஜ் வயது, கார்த்திக் சுப்புராஜ் தந்தை, கார்த்திக் சுப்பராஜ் மனைவி, கார்த்திக் சுப்பராஜ் இன்ஸ்டாகிராம், karthick naren, director karthick naren, karthick naren movies, கார்த்திக் நரேன், இயக்குநர் கார்த்திக் நரேன்
    கார்த்திக் நரேன்


    இதற்கிடையே கார்த்திக் நரேன் தற்போது தனுஷ் நடித்து வரும் ‘மாறன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான ’நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் கார்த்திக் நரேன் இயக்கிய ’அக்னி’ என்ற படமும் இடம்பெற்றது. இதைப் பார்த்துவிட்டு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தொலைபேசியில் கார்த்திக் நரேனை தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜுக்கு தனது நன்றியை தெரிவித்த கார்த்திக் நரேன், தான் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 3-ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது ’ஜிகர்தண்டா’ படம் வெளியானது என்றும் அந்த படத்தில் உள்ள ’பொட்டிக்கடை பழனி’ காட்சியை பார்த்த பின்னர் தான், தனக்குள் இயக்குநர் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும், இதனால் படிப்பை பதியிலேயே விட்டு விட்டு சினிமாவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: