ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வேள்பாரி நாவலை படமாக்கும் ஷங்கர்... உறுதிப்படுத்திய பிரபல இயக்குநர்!

வேள்பாரி நாவலை படமாக்கும் ஷங்கர்... உறுதிப்படுத்திய பிரபல இயக்குநர்!

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர்

இதில் யாஷ் மற்றும் பிற இந்திய நட்சத்திரங்களும் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வேள்பாரி நாவலை மையப்படுத்தி ஷங்கர் படம் இயக்குவதை இயக்குநர் காத்திக் சுப்புராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

    பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' மற்றும் ராம் சரண் நடிக்கும் 'RC15' ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அடுத்ததாக எழுத்தாளரும் எம்.பி-யுமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற வரலாற்று நாவலைத் தழுவி புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விருமன் ஆடியோ வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான சு.வெங்கடேசனுடன் தான் ஒரு பெரிய வேலையில் இருப்பதாக சூர்யா உறுதிப்படுத்தியிருந்தார். இந்த மறைமுக உறுதிப்படுத்தல், ஷங்கரும் சூர்யாவும் இணைகிறார்கள் என்பதை ஏறக்குறைய உறுதிப்படுத்தியது. இதில் யாஷ் மற்றும் பிற இந்திய நட்சத்திரங்களும் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    நீ வாழும் உடலை நேசி... பிபாசா பாசுவின் லேட்டஸ்ட் கர்ப்பகால க்ளிக்ஸ்!

    இந்நிலையில் 2023 ஜனவரியில் வேள்பாரி படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை ஷங்கர் தொடங்குவார் என்பதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் உறுதி செய்துள்ளார். 'RC15' படத்துக்கான திரைக்கதையை எழுதும்படி மூத்த இயக்குநரான ஷங்கர் கேட்டபோது, இதை தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார். 'வேள்பாரி' மூன்று பாகங்களாக ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் தற்போதைய படமான 'சூர்யா 42' இரண்டு பாகங்களாக உருவாவது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Suriya, Director Shankar