Home /News /entertainment /

இளையராஜா உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்திக் ராஜா!

இளையராஜா உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்திக் ராஜா!

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா

தற்போது வெற்றிமாறனின் விடுதலை, விஷாலின் துப்பறிவாளன் 2 உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார் இளையராஜா.

    இசைஞானி இளையராஜாவின் உடல்நிலை குறித்து வெளியான செய்தியில் உண்மையில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை இளையராஜா எனும் பெயர் இல்லாமல் எழுதி விட முடியாது. ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாய் தமிழ் ரசிகர்களின் உணர்வுகளோடு கடந்துவிட்டது இவரது நாதம். காதல், நட்பு, பகை துரோகம், ஏக்கம் என எல்லா உணர்வுகளையும் இவரது இசை தலைமுறைகளைத் தாண்டி கடத்திக் கொண்டே இருக்கிறது.

    தற்போது வெற்றிமாறனின் விடுதலை, விஷாலின் துப்பறிவாளன் 2 உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார். தவிர பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கும் இளையராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் இளையராஜாவின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலா வந்தன. இதையடுத்து நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நேரடியாக கார்த்திக் ராஜா அளித்துள்ள விளக்கத்தில், இசைஞானி இளையராஜா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ilayaraja

    அடுத்த செய்தி