ஷ்ரேயா கோஷல் பெரியாளாக வருவார் என தான் அப்போதே கணித்ததாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, சமீபத்திய நீயா நானா நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
விஜய் டிவி-யில் பார்வையாளர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளில் நீயா நானாவும் ஒன்று. இதனை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். நகைச்சுவையான விஷயங்கள் முதல் சீரியஸான பிரச்னைகள் அனைத்தயும் அந்த ட்ரெண்டுக்கு ஏற்றவாறு விவாதிப்பது நீயா நானாவின் ஸ்பெஷல். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியில் இசை ரசிகர்கள் மற்றும் பாடகர்கள் இடம்பெற்ற நீயா நானா ஒளிபரப்பானது.
அந்நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கலந்துக் கொண்டார். அதில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பகிர்ந்துக் கொண்டார். ”பல வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்கு நடுவராக போயிருந்தேன். அதில் ஒரு பொண்ணு வந்து பாடுது. பசங்க டீம்ல இன்னொரு பையன் வந்து பாடுறான். அடுத்த நாள் அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு, வேற வேற பாட்டு நான் குடுத்தேன். ஆனா அந்த பொண்ணுக்கு தெலுங்கு பாட்டுல வெறும் ஹம்மிங் மட்டும் தான் கொடுத்தேன். அந்த சிங்கர் தான் ஷ்ரேயா கோஷல்.
@shreyaghoshal ❤️🤩#KarthikRaja 👌👌👌 pic.twitter.com/8X0dI8T0es
— ஆன்மீக Shankar (@salemshankar) March 12, 2023
அந்த படத்தோட டைரக்டர் சாதனா சர்கத்தை கூப்பிடலாம்ன்னு சொன்னார். இல்லல்ல, இந்த பொண்ணு பெருசா வரும், நீங்க வேணும்ன்னா பாருங்கன்னு சொன்னேன். பெரிய ஒரு நுணுக்கம் ஒண்ணு இருக்கு. ஷ்ரேயா கோஷலோ, சித்ராவோ, ஜானகியோ இவங்களுக்கு இருக்க ஒரு பிளஸ் பாயிண்ட், புரிந்துக் கொள்ளும் தன்மை தான். சொன்னவுடனேயே கண்ணாடி மாதிரி பிரதிபலிச்சுடுவாங்க” என்று நீயா நானா நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டார் கார்த்திக் ராஜா.
2002-ல் இளையராஜா இசையில் நினு சூடக்கா நேனுண்டலேனு என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான ஷ்ரேயா கோஷல், அதே ஆண்டு கார்த்திக் ராஜா இசையில் ஆல்பம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.