விண்ணைத் தாண்டி வருவாயா கார்த்திக் - ஜெஸ்ஸியின் உரையாடல்; ட்ரெண்டான குறும்படம்!

அதற்கு த்ரிஷா என்னுடைய 3-வது குழந்தை நீ என்கிறார். பேசி முடித்தவுடன் உற்சாகம் கிடைத்துவிட்டதாகக் கூறி தனது பணிகளைத் தொடர்கிறார் சிம்பு.

  • Share this:
கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

2010-ம் ஆண்டு சிம்பு - த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. முழுக்க கார்த்திக் -ஜெஸ்ஸியின் காதலைப் பேசிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று இன்றும் ரசிகர்கள் கௌதம்மேனனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்தபடியே விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார் கௌதம்மேனன். இக்குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது.


வெளியிடப்பட்ட ஒருநாளில் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருப்பதோடு 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது.

அக்குறும்படத்தில், படத்துக்காக கதை எழுத உட்காரும் சிம்புக்கு சிக்கல் ஏற்பட, கேரளாவுக்கு வந்திருக்கும் த்ரிஷாவுக்கு போன் செய்து பேசுகிறார். இருவரும் அவரவர் வாழ்க்கை குறித்து பேசிக் கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் நீ வேண்டும் என்கிறார் சிம்பு. அதற்கு த்ரிஷா என்னுடைய 3-வது குழந்தை நீ என்கிறார். பேசி முடித்தவுடன் உற்சாகம் கிடைத்துவிட்டதாகக் கூறி தனது பணிகளைத் தொடர்கிறார் சிம்பு.

குறும்படம் முழுக்க உரையாடலாகவே நீண்டாலும் வசனங்கள் மூலம் பார்வையாளர்களை தன்வசப்படுத்தியிருக்கிறார் கௌதம்மேனன்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading