Home /News /entertainment /

கார்த்திக் நரேன், அதர்வா இணையும் நிறங்கள் மூன்று!

கார்த்திக் நரேன், அதர்வா இணையும் நிறங்கள் மூன்று!

நிறங்கள் மூன்று

நிறங்கள் மூன்று

படத்தில் அதர்வாவுடன் சரத்குமார், ரகுமான் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். இவர்கள் மூவரையும் குறிக்கும் விதமாக நிறங்கள் மூன்று என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

துருவங்கள் பதினாறு, மாஃபியா, மாறன் படங்களை இயக்கிய கார்த்தின் நரேனின் அடுத்தப் படத்தில் அதர்வா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு நிறங்கள் மூன்று என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கார்த்தின் நரேனின் முதல் படம் துருவங்கள் பதினாறு அவரை முக்கியமான இயக்குனராக அடையாளப்படுத்தியது. துரதிர்ஷ்டவசமாக அவர் இயக்கிய இரண்டாவது படம் நரகாசூரன் இன்னும் வெளியாகவில்லை. அதையடுத்து இயக்கிய மாஃபியா ரசிகர்களுக்கு முழு திருப்தி தராத படம். மாஃபியா இரண்டு பாகங்களை கொண்டது என்பதால் அதன் முதல் பாகம் பாதி உணவில் எழுப்பிவிட்ட உணர்வையே தந்தது. தனுஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் மாறன் திரைப்படம் வெளிவந்தால் தான் கார்த்திக் நரேனின் படைப்புத்திறமை குறித்து ஒரு மதிப்பீட்டுக்கே பார்வையாளர்கள் வர முடியும். இந்நிலையில் தனது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய படத்தில் அதர்வாவுடன் சரத்குமார், ரகுமான் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். இவர்கள் மூவரையும் குறிக்கும் விதமாக நிறங்கள் மூன்று என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. வில்லு, ஏகன், பேராண்மை, நந்தலாலா உள்பட பல படங்களை தயாரித்த ஐங்கரன் கடந்த சில வருடங்களாக தயாரிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தது. 2022-ல் நிறங்கள் மூன்று படத்தின் மூலம் மீண்டும் களத்துக்கு திரும்பியிருக்கிறார்கள். வரும் 5-ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

Karthick Naren and Atharva join hands for Nirangal Moondru, Nirangal Moondru movie, Nirangal Moondru atharvaa, Nirangal Moondru, karthick naren, karthick naren education, karthick naren tweet, karthick naren net worth, karthick naren age, karthick naren born, karthick naren naragasooran release date, navarasa karthick naren, atharvaa murali, atharva wife, atharvaa upcoming movies, atharvaa phone number, atharvaa instagram, atharvaa twitter, handsome atharvaa, atharvaa father, கார்த்திக் நரேன், கார்த்திக் நரேன் அதர்வா, அதர்வா திரைப்படம், நிறங்கள் மூன்று

கார்த்திக் நரேன் இதுவொரு ஹைப்பர்லிங்க் த்ரில்லர் என கூறியுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Atharvaa, Sarathkumar, Tamil Cinema

அடுத்த செய்தி