முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வைகை அணையில் படப்பிடிப்பு - சர்ச்சையில் சிக்கிய கார்த்தியின் விருமன்

வைகை அணையில் படப்பிடிப்பு - சர்ச்சையில் சிக்கிய கார்த்தியின் விருமன்

விருமன்

விருமன்

கன மழை பெய்து வைகை அணை நிரம்பியிருக்கும் நேரத்தில் சட்டத்துக்குப் புறம்பாக விருமன் படத்துக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

  • Last Updated :

முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனி சுற்றுவட்டாரங்களில் நடைப்பெற்று வருகிறது. கார்த்தி நடிக்கும் இந்தப் படத்தில் ஷங்கரின் இளைய மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். வைகை அணையில் நீர்மட்டம் 69.40 அடியாக இருந்த போது சென்ற மாத இறுதியில் வைகை அணையில் விருமன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

பொதுவாக இதுபோன்ற அபாயகரமான நேரங்களில் பொதுமக்களுக்கே அணையில் அனுமதி கிடையாது. ஆனால், விருமன் படப்பிடிப்பு அனுமதி பெற்று நடந்துள்ளது.

சுமார் 2355 கன அடி நீர் வெளியேற்றப்படுகிற நேரத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது குறித்து சிலர் சர்ச்சை கிளப்பினர். மாவட்ட நிர்வாகம் எவ்வித அனுமதியும் அளிக்கவில்லை என இதற்கு பதில் கிடைத்துள்ளது. தேனி பிஆர்ஓ அனுமதி அளித்திருக்கலாம் என்கிறார்கள்.

also read : புடவையில் ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா - போட்டோஸ்

இந்தப் பிரச்சனையை கிளப்பியிருப்பவர்கள் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் விருமன் என்றே குறிப்பிடுகிறார்கள். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரிப்பதால் அவரையும் இதில் கோர்த்துவிட்டுள்ளனர். படப்பிடிப்புக்கு அனுமதி வாங்குவது தயாரிப்பாளரின் வேலை என்பதால் சூர்யாவையும் சேர்த்தே விமர்சிக்கின்றனர். அதே நேரம் சூர்யாவின் நீட் எதிர்ப்பு, ஜெய் பீம் திரைப்படம் போன்றவற்றால் ஒவ்வாமை கொண்ட சிலர்தான் தேவையில்லாமல் இதனை பிரச்சனையாக்குவதாக ஒருசாரார் குறிப்பிடுகின்றனர்.எப்படியோ, விருமன் படப்பிடிப்பு தேனி பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மை.

top videos
    First published:

    Tags: Actor Karthi, Album