முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விருமன் - திருச்சிற்றம்பலம் வசூலால் உற்சாகத்தில் திரைத்துறையினர்!

விருமன் - திருச்சிற்றம்பலம் வசூலால் உற்சாகத்தில் திரைத்துறையினர்!

திருச்சிற்றம்பலம் - விருமன்

திருச்சிற்றம்பலம் - விருமன்

விருமன் மற்றும் திருச்சிற்றம்பலம் படங்கள் நல்ல வசூலை கொடுத்து வருவதால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விருமன் மற்றும் திருச்சிற்றம்பலம் படங்கள் தமிழகத்தில் நல்ல வசூலை எடுத்திருப்பதாக திரைத்துறையினர் கூறுகின்றனர். 

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான வலிமை, பீஸ்ட், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டின. அதிலும் விக்ரம் திரைப்படம் 175 கோடி ரூபாய் வசூல் செய்தது.  இந்தப் படங்களை தவிர  சிவகார்த்திகேயன் நடித்த டான் 70 கோடி ரூபாயும், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சுமார் 36 கோடி தமிழகத்தில் வசூல் செய்தது.

இந்த திரைப்படங்களுக்கு பிறகு வெளியான படங்கள் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை. அருண் விஜய் நடித்த யானை படம் மட்டும், 18 கோடி வசூல் செய்திருந்தது.

இரண்டு மாதங்களாக வெளியான மற்றப் படங்கள் வசூல் செய்ய தடுமாறியதால், திரையரங்க உரிமையாளர்கள் அச்சத்தில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 12ம் தேதி வெளியான விருமன் திரைப்படமும், தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் படமும் திரைத் துறையினரை மீண்டும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளன என விநியோகஸ்தர் கார்த்திக் ரவிவர்மா கூறுகிறார்.

அதில் விருமன் திரைப்படம் 10 நாட்களில் 42 கோடியே 55 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. அத்துடன் அந்தப் படம் மூன்றாவது நாளில் மட்டும் 8 கோடியே 50 லட்சம் வசூல் செய்தது. இது கார்த்தி நடிப்பில் வெளியான படங்களில் ஒரு நாள் வசூலில் அதிகம் என கார்த்தி ரவிவர்மா தெரிவிக்கிறார்.

விருமன் திரைப்படத்தை தொடர்ந்து கடந்த 18-ம் தேதி வெளியான திருச்சிற்றம்பலம் படமும் நல்ல வசூலை ஈட்டிவருகிறது. அந்த திரைப்படம் முதல் நாளில் 5 கோடியே 60 லட்சமும், 2வது நாளில் 6 கோடியே 70 லட்சமும், 3வது நாளில் 7 கோடியே 20 லட்சமும், 4வது நாளில் 7 கோடியே 40 லட்சமும் வசூலித்தது. அதேபோல் வார நாளான நேற்று 3 கோடியே 50 லட்சம் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 30 கோடியே 40 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. விருமன் மற்றும் திருச்சிற்றம்பலம் படங்கள் நல்ல வசூலை கொடுத்து வருவதால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Theater owners and distributors are happy as the films Viruman and Thiruchitrambalam are collecting well at box office, thiruchitrambalam meaning, thiruchitrambalam tamil movie, thiruchitrambalam mp3, thiruchitrambalam temple, thiruchitrambalam story, thiruchitrambalam movie wikipedia, thiruchitrambalam ott release date, thiruchitrambalam budget, viruman trailer, viruman bookmyshow, viruman producer, viruman wiki, viruman ticket booking, viruman showtimes, viruman heroine name, viruman imdb rating, விருமன், திருச்சிற்றம்பலம், தனுஷ், கார்த்தி
கார்த்திக் ரவிவர்மா

விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ் சினிமாவில் மீண்டும் வெற்றிப்படங்கள் வெளியாக தொடங்கியுள்ளன. இந்த நிலை அடுத்தடுத்து தொடர வாய்ப்பு உள்ளது என கார்த்திக் ரவிவர்மா கூறுகிறார். குறிப்பாக கோப்ரா, பிசாசு-2, கேப்டன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அந்தப் படங்கள் நிச்சயம் நல்ல வசூலை ஈட்டும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

First published:

Tags: Actor dhanush, Actor Karthi, Tamil Cinema