• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பத்துநாள் இடைவெளியில் மூன்று படங்களில் நடிக்கும் கார்த்தி!

பத்துநாள் இடைவெளியில் மூன்று படங்களில் நடிக்கும் கார்த்தி!

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கிராமத்து ஆக்‌ஷன் சென்டிமெண்ட் படம் இது.

  • Share this:
    கார்த்தி தற்போது சர்தார், பொன்னியின் செல்வன், விருமன் என மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    பத்து நாள் இடைவெளியில் இந்த மூன்று படங்களுக்கும் அவர் கால்ஷீட் தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கார்த்தியின் நடிப்பில் அடுத்து சர்தார் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லை, விருமனை முதலில் முடித்து அதைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர் எனவும் கூறுகின்றனர். தற்போது கார்த்தி சர்தார் படப்பிடிப்பில் உள்ளார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிக்கும் படம் இது. சில தினங்கள் மட்டுமே சர்தாருக்கு அவர் கால்ஷீட் தந்துள்ளார்.

    இதையடுத்து 16 ஆம் தேதி பொள்ளாச்சியில் கார்த்தி சம்பந்தப்பட்ட சில காட்சிகளை பொன்னியின் செல்வனுக்காக மணிரத்னம் எடுக்கிறார். அங்கு இரண்டுநாள் படப்பிடிப்பை முடித்த பின் 18 ஆம் தேதிமுதல் விருமன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கிராமத்து ஆக்‌ஷன் சென்டிமெண்ட் படம் இது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இதில் நாயகியாக அறிமுகமாகிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: