கார்த்தியின் தெலுங்கு மெட்ராஸின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

மெட்ராஸ்

ஒரு சுவரின் பின்னணியில் சென்னை அரசியலை மெட்ராஸ் யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருந்தது.

 • Share this:
  கார்த்தி நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் இதுவரை தெலுங்கில் வெளியாகாமல் இருந்தது. தற்போது அதனை ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கில் டப் செய்து வெளியிடுகின்றனர்.

  முதல் படம் அட்டகத்தியின் வெற்றிக்குப் பிறகு பா.இரஞ்சித் இயக்கிய படம் மெட்ராஸ். ஒரு சுவரின் பின்னணியில் சென்னை அரசியலை மெட்ராஸ் யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருந்தது. எளிய மக்களின் பிரதிநிதியாக இருக்கும் அரசியல் தலைவர் சுயநலத்துக்காக தனது கட்சிக்காரனையே பலிகொடுப்பதும், அதையறிந்த இறந்து போனவனின் நண்பன் அரசியல் தலைவரை பழிவாங்குவதுமே மெட்ராஸின் கதை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Karthi's Telugu Madras First Look Release, madras, madras movie, madras telugu remake, madras telugu movie, karthi madras movie, மெட்ராஸ், மெட்ராஸ் படம், மெட்ராஸ் தெலுங்கு ரீமேக், மெட்ராஸ் தெலுங்கு படம், கார்த்தி மெட்ராஸ் படம்
  மெட்ராஸ்


  கார்த்தி, கலையரசன், கேதரின் தெரேசா உள்ளிட்டவர்களின் நடிப்பில் மெட்ராஸ் நல்லதொரு அரசியல் படமாக அது வெளியான காலகட்டத்தில் பாராட்டப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் படத்தை தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படத்தின் அருமையான பாடல்கள் பட வெற்றிக்கு பெரிதும் உதவின.

  கார்த்திக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உண்டு. மெட்ராஸ் இதுவரை தெலுங்கில் டப் செய்யப்படவில்லை என்பதே ஆச்சரியம். செப்டம்பர் மாதம் மெட்ராஸின் தெலுங்குப் பதிப்பை ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியிடுவதாக அறிவித்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். ரஞ்சித்தின் சார்ப்பட்டா பரம்பரைக்கு கிடைத்த வெற்றியே மெட்ராஸ் இப்போது தெலுங்கு பேசுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: