Home /News /entertainment /

ஆகஸ்ட் 11-ம் தேதி விருமன் படத்தை வெளியிட பேச்சுவார்த்தை

ஆகஸ்ட் 11-ம் தேதி விருமன் படத்தை வெளியிட பேச்சுவார்த்தை

விருமன்

விருமன்

யுவன் சங்கர் ராஜா விருமன் திரைப்படத்தின் பின்னணி இசை கோர்ப்பு வேலையை முடித்துக் கொடுத்தால், அந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியே வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

  • News18
  • Last Updated :
கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தை ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

கொம்பன் திரைப்படத்தை தொடர்ந்து முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி இணைந்துள்ள விருமன் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியிலிருந்து,  ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.  இதன் காரணமாக ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட கார்த்தியின் விருமன் திரைப்படத்தை ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

அந்த திரைப்படத்திற்கான இறுதி கட்ட பணிகள் முடிவடைந்து பின்னணி இசை கோர்ப்பு வேலைகள் மட்டும் மீதம் உள்ளன. அதற்கான பணியை யுவன் ஷங்கர் ராஜா ஏற்கனவே தொடங்கி இருந்தாலும்,  மலேசியாவில் நடந்த தன்னுடைய இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் நாளை சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Also read... வெளியானது மை டியர் பூதம் படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ

யுவன் சங்கர் ராஜா விருமன் திரைப்படத்தின் பின்னணி இசை கோர்ப்பு வேலையை முடித்துக் கொடுத்தால், அந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியே வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் ஷங்கர் மகள் அதிதி நாயகியாக நடித்துள்ளார். அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi

அடுத்த செய்தி