ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெளியீட்டுக்கு முன்பே பல கோடி வசூலித்த கார்த்தியின் சர்தார்!

வெளியீட்டுக்கு முன்பே பல கோடி வசூலித்த கார்த்தியின் சர்தார்!

சர்தார் படத்தில் கார்த்தி

சர்தார் படத்தில் கார்த்தி

தமிழக உரிமை அல்லாமல் மற்ற வியாபாரங்கள் மூலம் 64 கோடி வசூல் செய்த சர்தார் திரைப்படம். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தமிழக வெளியீட்டு உரிமம் அல்லாமல் 64 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் தற்போது சர்தார் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஸ்பை திரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பாளர் லக்ஷ்மன் திட்டமிட்டு இருக்கிறார். இதனால் முதல் பிரதியை தயார் செய்யும் வேலையில் இயக்குனர் பி.எஸ். மித்ரன் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறார்.

அதேசமயம் தயாரிப்பாளர் லக்ஷ்மன் படத்திற்கான வியாபார பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் தமிழகம் அல்லாத மற்ற வியாபாரங்கள் மூலமாக சர்தார் திரைப்படம் 64 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமங்கள் ஆகியவை 31 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை தவிர, இந்தி டப்பிங் உரிமையை 11 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் தயாரிப்பாளர்.

மேலும் தெலுங்கு திரையரங்கு வியாபாரம் 8 கோடிக்கும், தெலுங்கு தொலைக்காட்சி உரிமம் 3 கோடிக்கும்,  வெளிநாட்டு வெளியீட்டு உரிமை 6 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகா மற்றும் கேரளா உரிமைகள் 2 கோடியே 60 லட்சத்துக்கு மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கான வியாபாரம் இன்னும் நடைபெறவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லிவ் இன், மதமாற்றம், திருமணம், கர்ப்பம்... செவ்வந்தி சீரியல் நடிகையை ஏமாற்றிய செல்லம்மா சீரியல் ஹீரோ சித்து..

இவை தவிர ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள பாடல்களின் உரிமை ஒரு கோடியை 50 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் மட்டுமே சுமார் 64 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது. இது தவிர தமிழக வெளியீடு உரிமை உள்ளது. கார்த்தி நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் சர்தார் திரைப்படத்தின் வியாபாரமும் சிறப்பான முறையில் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

Published by:Shalini C
First published:

Tags: Actor Karthi