Home /News /entertainment /

கார்த்தி கொடுத்த தளபதி 67, கைதி 2 அப்டேட்

கார்த்தி கொடுத்த தளபதி 67, கைதி 2 அப்டேட்

கைதி

கைதி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'தளபதி 67' படத்தை இயக்குவார் என்பதையும் கார்த்தி இதன் மூலம் உறுதிப்படுத்தியதாக தெரிகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தளபதி 67 படத்துக்குப் பிறகு கைதி 2 படம் ஆரம்பமாகும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். 

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து 2019 தீபாவளிக்கு லோகேஷ் - கார்த்தி கூட்டணியில் வெளியான 'கைதி' படத்தின் இரண்டாம் பாகமான 'கைதி 2' படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்தப் படம் வெளியானபோது இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கைதி 2 படத்தில் நடிக்கவிருப்பதாக கார்த்தி தெரிவித்திருந்தார். பின்னர் நடிகர் - இயக்குநர் இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியானார்கள்.

    இதற்கிடையே தற்போது, 'கைதி 2' திரைப்படம் தயாராகி வருவதாகவும், விஜய்யுடன் தளபதி 67 படத்தை முடித்தவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்குவதாகவும் கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். விஜய்யின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக இன்னும் காத்திருக்கும் நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'தளபதி 67' படத்தை இயக்குவார் என்பதையும் கார்த்தி இதன் மூலம் உறுதிப்படுத்தியதாக தெரிகிறது.



    அடுத்த ஆண்டு இறுதியில் கைதி 2 திரைக்கு வரும் என்றும கார்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிறைக்கு செல்வதற்கு முன்பு கார்த்தியாக நடித்த டில்லி என்ன செய்து கொண்டிருந்தார், ஹரீஷ் உத்தமனின் கதாபாத்திரமான அடைக்கலத்திற்கும் டில்லிக்கும் இடையேயான கதை என்ன என்பதைப் பற்றியதாக 'கைதி 2' இருக்க வாய்ப்புள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் ஒலித்த சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் குரல்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையில், கார்த்தி சிறையில் இருந்தபோது, கபடி வீரராக இருந்ததையும், அவர் சிறைக்கு எப்படி வந்தார் என்பதையும் கைதி 2-வில் தெரிந்துக் கொள்ளலாம் என லோகேஷ் கனகராஜ் முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Karthi, Lokesh Kanagaraj, Thalapathy vijay

    அடுத்த செய்தி