ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் இவைகள் தான்!

இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் இவைகள் தான்!

தீபாவளி படங்கள்

தீபாவளி படங்கள்

பொதுவாக தீபாவளிக்கு ரஜினி, விஜய், அஜித் என மாஸ் நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி கொண்டாட்டத்தை இருமடங்காக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தீபாவளிக்கு வெளியாகும் புதிய படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசுகள், புதுத்துணி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு புதிய படங்களும் முக்கியத்துவம் பெறும். விதவிதமான இனிப்புகள், உணவுகளை சாப்பிட்டு விட்டு, திரையரங்கிற்கு சென்று புதிய படங்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு ரசிகர்கள்.

இந்தாண்டு தீபாவளி வரும் அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக தீபாவளிக்கு ரஜினி, விஜய், அஜித் என மாஸ் நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி கொண்டாட்டத்தை இருமடங்காக்கும். கடந்தாண்டு ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த வருடம் இவர்கள் மூவரின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அந்த வகையில் இந்த வருட தீபாவளிக்கு சர்தார், பிரின்ஸ் ஆகியப் படங்களுடன் பிளாக் ஆடம் என்ற ஹாலிவுட் படமும் வெளியாகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள 'சர்தார்' படத்தில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யூகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

15 வருட பயணம்... பரதநாட்டியம், வீணை வாசிப்பு என ஆச்சர்யப்படுத்தும் இந்திரஜா சங்கர்!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். தமிழக இளைஞனுக்கும் லண்டன் பெண்ணுக்குமான காதலை மையப்படுத்திய இப்படத்தில், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள். பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா மற்றும் மாநாடு படத்தை எடிட்டிங் செய்த பிரவீன் ஆகியோர் பிரின்ஸ் படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். இப்படமும் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹாலிவுட் நடிகர் ராக் நடித்துள்ள பிளாக் ஆடம் படம் வரும் அக்டோபர் 20-ம் தேதி வெளியாகிறது.

First published:

Tags: Hollywood