Home /News /entertainment /

நீண்ட இடைவெளிக்குப் பிறகு துவங்கும் கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பு!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு துவங்கும் கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பு!

கார்த்தி

கார்த்தி

சர்தார் ஒரு ஸ்பை த்ரில்லர். கார்த்தி இதில் இரு வேடங்களில் நடிக்கிறார்.

கார்த்தி நடிப்பில் 2020-ல் தொடங்கப்பட்ட படம் சர்தார். 2021-ல் தொடங்கப்பட்ட விருமன் முடிந்த பிறகும் சர்தார் படம் குறித்து எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது. இப்போது சர்தாரின் படப்பிடிப்பு குறித்து தகவல் கிடைத்துள்ளது.

2020 பிப்ரவரி 14-ல் சர்தார் படத்துக்கு பூஜை போடப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கியது 2021 ஏப்ரல் 26. கோவிட் உச்சத்தில் இருந்ததால் இரண்டு நாள் படப்பிடிப்புடன் படம் பேக்கப்பானது. படத்துக்காகப் போட்ட அரங்கு வீணானது தான் மிச்சம். சர்தார் அறிவிக்கப்பட்ட பிறகு கார்த்தி பொன்னியின் செல்வனில் நடித்தார். அதன் முதல் பாகம் எப்போதோ முடிவடைந்துவிட்டது. அதனைத் தொடர்ந்தும் சர்தார் ஆரம்பிக்கப்படவில்லை. தனது அண்ணன் சூர்யா தயாரித்த விருமனில் நடிக்கச் சென்றார் கார்த்தி. இப்போது விருமனும் முடிந்த நிலையில் ஜனவரி 6-ஆம் தேதி முதல் சர்தார் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். சென்னையில் இந்தப் படப்பிடிப்பு நடக்கிறது.

சர்தார் ஒரு ஸ்பை த்ரில்லர். கார்த்தி இதில் இரு வேடங்களில் நடிக்கிறார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் சிம்ரன், முனிஷ்காந்த், இந்தி நடிகர் சங்கி பாண்டே, முரளி சர்மா, இளவரசு ஆகியோரும் நடிக்கின்றனர். இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் படத்தை இயக்குகிறார். யுவன் இசையமைப்பதாகச் சொல்லப்பட்டு தற்போது அந்தப் பொறுப்பை ஜீ.வி.பிரகாஷிடம் ஒப்படைத்துள்ளனர். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Karthi

அடுத்த செய்தி