ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கார்த்தியின் சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… போலீஸ் கேரக்டர் போஸ்டர் வெளியீடு

கார்த்தியின் சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… போலீஸ் கேரக்டர் போஸ்டர் வெளியீடு

சர்தார் படத்தில் கார்த்தி

சர்தார் படத்தில் கார்த்தி

சர்தார் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார் ரூபன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அவருக்கு பிறந்தநாள் வரும் நிலையில் அதற்கு வாழ்த்துச் சொல்லும் விதமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் கார்த்தி, தயாரிப்பாளர்களின் விருப்ப நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தொடர்ச்சியாக ரிலீசிற்கு காத்திருக்கின்றன.

அவற்றில் சர்தார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இந்தப் படத்தில் திறமையான உளவுத்துறை ஏஜென்ட் மற்றும் போலீஸ் என 2 கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார்.

இதையும் படிங்க - தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டர் போஸ்டர் வெளியீடு…

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கன்னா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் ஹீரோ பட சறுக்கலுக்கு பிறகு இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்குனம் படம் என்பதால் சர்தார் படத்தின் மீது கார்த்தியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

எனக்கு வாய்ப்பு தர என் அம்மாவை அட்ஜஸ்ட் செய்ய சொன்னார்கள் - பகீர் கிளப்பிய செந்தூரப்பூவே ஸ்ரீநிதி 

சர்தார் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார் ரூபன்.

நாளை கார்த்தியின் பிறந்த நாளையொட்டி, இன்று சர்தார் படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி தீபாவளியையொட்டி கார்த்தியின் சர்தார் வெளியாகிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சர்தார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதியும், பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ம்தேதியும் வெளியாகவுள்ளது.

First published:

Tags: Actor Karthi