Home /News /entertainment /

அஜித்தின் ஏகே 61- படத்துடன் மோதும் கார்த்தியின் சர்தார்…

அஜித்தின் ஏகே 61- படத்துடன் மோதும் கார்த்தியின் சர்தார்…

சர்தார் கார்த்தி - ஏகே 61 அஜித்

சர்தார் கார்த்தி - ஏகே 61 அஜித்

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தொடர்ச்சியாக ரிலீசிற்கு காத்திருக்கின்றன.

தீபாவளியையொட்டி அஜித் நடிப்பில் உருவாகி வரும் ஏகே 61 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படமும் தீபாவளியையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அஜித் படத்துடன் கார்த்தி படம் நேரடியாக மோதும் நிலை உருவாகியுள்ளது. வலிமை படத்தின் வெற்றிக்கு பின்னர் அதே கூட்டணி ஏகே 61 படத்தில் இணைந்துள்ளது.

எச் வினோத் இயக்கி வரும் இந்த படத்தில் வங்கி மோசடியை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரி பேராசிரியர் மற்றும் வில்லன் கேரக்டரில் அஜித் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திக்கனி, ஜான் கோக்கன், உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்தை தீபாவளியையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முயன்று வருகின்றனர்.

இதையும் படிங்க - தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டர் போஸ்டர் வெளியீடு…

இந்நிலையில் தீபாவளியையொட்டி கார்த்தி நடித்துள்ள சர்தார் படமும் திரைக்கு வரும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அவருக்கு பிறந்தநாள் வரும் நிலையில் அதற்கு வாழ்த்துச் சொல்லும் விதமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

மகள்களுக்காக காத்திருக்கிறேன்.. மறுமணத்திற்கு பின் டி.இமான் உருக்கம்! 

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தொடர்ச்சியாக ரிலீசிற்கு காத்திருக்கின்றன.



அவற்றில் சர்தார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இந்தப் படத்தில் திறமையான உளவுத்துறை ஏஜென்ட் மற்றும் போலீஸ் என 2 கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கன்னா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் ஹீரோ பட சறுக்கலுக்கு பிறகு இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கும் படம் என்பதால் சர்தார் படத்தின் மீது கார்த்தியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் கார்த்தியின் சர்தாரும், அஜித்தின் ஏகே 61 படமும் தீபாவளிக்கு நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Actor Ajith, Actor Karthi

அடுத்த செய்தி