• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sulthan: கார்த்தியின் ’சுல்தான்’ லேட்டஸ்ட் அப்டேட்!

Sulthan: கார்த்தியின் ’சுல்தான்’ லேட்டஸ்ட் அப்டேட்!

சுல்தான் பட போஸ்டர்

சுல்தான் பட போஸ்டர்

கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சுல்தான்’ படத்தின் சென்சார் குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சுல்தான்’ படத்தின் சென்சார் குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரெமோ படத்தின் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் தற்போது இயக்கியுள்ள படம் ‘சுல்தான்’. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னா நடித்துள்ளார். அதிரடி மாஸ் மசாலா பொழுதுப்போக்கு படமான இதில் ராமச்சந்திர ராஜு, லால் பால், நெப்போலியன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடிக்கின்றனர்.



    பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அதோடு சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜாவும், பாடல்களுக்கான இசையை விவேக் - மெர்வினும் அமைத்துள்ளார்கள். இந்நிலையில் சென்சாரில் ‘சுல்தான்’ படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: