சர்தார் : கார்த்திக்கு இரண்டு வேடம் இரண்டு ஜோடி

சர்தார் : கார்த்திக்கு இரண்டு வேடம் இரண்டு ஜோடி

நடிகர் கார்த்தி

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடிக்கக்கூடும் என்கின்றன தகவல்கள்.

  • Share this:
கார்த்தி நடிப்பில் இந்த வருடம் சுல்தான் திரைப்படம் திரைக்கு வந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் விஷயத்தில் சுல்தான் கஜானாவை நிரப்பியது.

தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி நடிக்கிறார். நேற்று, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கும் சர்தார் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். இரும்புத்திரை படத்தின் மூலம் அழுத்தமாக தடம் பதித்த பி.எஸ்.மித்ரனின் இரண்டாவது படம் ஹீரோ சுமாராகவே போனது. அதையடுத்து மூன்றாவது படமாக சர்தார் தயாராகிறது.

இதில் ஒரு போலீஸ், ஒரு உளவாளி கதாபாத்திரங்கள் வலுவாக இடம்பெறுவதாக பி.எஸ்.மித்ரன் கூறியுள்ளார். இந்த இரு வேடங்களிலும் கார்த்தி நடிப்பதாக கூறப்படுகிறது. ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என இரு நாயகிகள். ரஜிஷா விஜயன் நடிப்பில் சமீபத்தில்தான் கர்ணன் திரைப்படம் வெளிவந்தது. உடனடியாக அடுத்தப் படம் கிடைத்துள்ளது. இவர்களுடன் முக்கிய வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். இதற்கு முன் சிறுத்தை காஷ்மோரா படங்களில் கார்த்தி இரு வேடங்களில் நடித்துள்ளார். சர்தார் மூன்றாவது படமாக இருக்கும்.

சர்தாரை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜீ.வி.பிரகாஷ் இசையில் ஏற்கனவே இரு பாடல்களின் கம்போஸிங் முடிந்துவிட்டது. சென்னையில் படத்துக்காக பிரமாண்ட அரங்கு அமைக்கிறார்கள். சென்னை தவிர்த்து மைசூர், தென்காசியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜார்ஜ் சர்தாருக்கு ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி எல்.ரூபன் எடிட்டிங்கை கவனிக்கிறார். ஆக்ஷன் திரைப்படமாக சர்தார் தயாராகிறது.
Published by:Sheik Hanifah
First published: