ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூது கவ்வும் நலன் குமாரசாமியின் அடுத்தப் படத்தில் கார்த்தி?

சூது கவ்வும் நலன் குமாரசாமியின் அடுத்தப் படத்தில் கார்த்தி?

நலன் குமாரசாமி - கார்த்தி

நலன் குமாரசாமி - கார்த்தி

ராஜு முருகன் படத்தை முடித்த பின்னரே கார்த்தி இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவார் என்றும், அதை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் நலன் குமாரசாமியின் அடுத்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் கார்த்தி.

2022-ம் ஆண்டு பொன்னியின் செல்வன்-1, சர்தார் மற்றும் விருமன் ஆகியப் படங்கள் வெளியாகி நடிகர் கார்த்திக்கு மறக்க முடியாத ஆண்டாக மாறியது. தற்போது இயக்குநர் ராஜு முருகனின் ஜப்பான் படப்பிடிப்பில் பிஸியாக உள்ள அவர் சூது கவ்வும் புகழ் நலன் குமாரசாமியின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்தப் படம் இந்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்தி தனது அடுத்த படத்தில் பணிபுரிவதை இயக்குநர் நலன் குமாரசாமி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் படம் குறித்த மேலும் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார். இருப்பினும், ராஜு முருகன் படத்தை முடித்த பின்னரே கார்த்தி இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவார் என்றும், அதை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Karthi, Tamil Cinema