Home /News /entertainment /

கார்த்தியின் அடுத்தப்பட இயக்குநர் யார் தெரியுமா?

கார்த்தியின் அடுத்தப்பட இயக்குநர் யார் தெரியுமா?

கார்த்தி

கார்த்தி

இவர்களின் கூட்டணி குறித்த செய்தி நீண்ட காலமாக யூகமாக இருந்து வந்தது, அது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் கார்த்தியை வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்குவதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் ராஜுமுருகன். 

    கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் வரவிருக்கும் குடும்பப் படமான ‘விருமன்’ ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது படக்குழுவினர் அதற்கான ப்ரொமோஷன் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். கார்த்தியும் அதிதி ஷங்கரும் மலேசியாவில் இருந்து திரும்பியதும், ‘விருமன்’ ப்ரோமோஷனுக்காக சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் ராஜு முருகன், கார்த்தியுடன் தனது அடுத்தப் படத்தை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.

    ‘விருமன்’ படத்தின் பாடலாசிரியர்களில் ஒருவரான இயக்குநர் ராஜு முருகன், இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். கார்த்தியை தனது அடுத்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்களின் கூட்டணி குறித்த செய்தி நீண்ட காலமாக யூகமாக இருந்து வந்தது, அது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழில் ‘குக்கூ’, ‘ஜிப்சி’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராஜு முருகன்.

    நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ப்ரோமோ!

    முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சரண்யா பொன்வண்ணன், சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘விருமன்’. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகை அதிதி ஷங்கர் சினிமாவில் அறிமுகமாகிறார். இதையடுத்து மடோனா அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தவிர கார்த்தியின் நடிப்பில் இந்த ஆண்டு இன்னும் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதோடு கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘சர்தார்’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Karthi

    அடுத்த செய்தி