கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகிறது. இந்தப் படத்தை இரும்புத்திரை படத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ஸ்பை த்ரில்லர் ஆக்ஷன் ஜேனரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
இதில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2 கேரக்டரில் கார்த்தி இடம்பெற்றுள்ளார். ஜிவி பிரகாஷ் சர்தார் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்துடைய டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 நிமிடங்கள் 21 வினாடிகள் ஓடக்கூடியதாக சர்தார் படத்தின் ட்ரைலர் கட் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் உளவாளி கேரக்டரில் கார்த்தி நடித்திருக்கிறார்.
Congratulations Entire Team of #Sardar🎉💐💥
A racy and action-packed entertainer coming to the big screens on October 21st!🤩#SardarTrailer
▶️- https://t.co/KxFckIO5lN#SardarDeepavali @Karthi_Offl @Prince_Pictures @RedGiantMovies_ @Psmithran @gvprakash @RaashiiKhanna_ pic.twitter.com/TMkqRjU0Wb
— Studio Green (@StudioGreen2) October 14, 2022
டிரைலரில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளியையொட்டி சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படமும் திரைக்கு வருவதால் சர்தார் மற்றும் பிரின்ஸ் படங்களுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்தி, சர்தார் மற்றும் பிரின்ஸ் ஆகிய இரண்டு படங்களுமே வெற்றி பெற வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளியிட்டிருந்தார். அக்டோபர் 21- ஆம் தேதி வெள்ளிக்கிழமை சர்தார் திரைப்படம் திரைக்கு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Karthi