Home /News /entertainment /

ரஷ்ய மொழியில் வெளியாகும் கார்த்தியின் கைதி!

ரஷ்ய மொழியில் வெளியாகும் கார்த்தியின் கைதி!

கைதி

கைதி

கைதியை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. அவர்கள் தான் முயற்சி எடுத்து கைதியை ரஷ்ய மொழியில் வெளியிடுகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி  நடிப்பில் 2019-ல் வெளிவந்த திரைப்படம் கைதி. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தத் திரைப்படம் ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

மாநகரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தை எடுத்திருந்தார். ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. காதல் காமெடி பாடல்கள் என எதுவும் இல்லாமல் அப்பா மகள் சென்டிமென்டையும்,  ஆக்ஷன் காட்சிகளையும் மட்டும் வைத்து விறுவிறுப்பாக கதை சொல்லியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் படம் கைதி டில்லி என்ற பெயரில் ஜப்பானில் வெளியானது. அதனைத் தொடர்ந்து இப்போது ரஷ்யாவில் வெளியிட இருக்கின்றனர். ரஷ்ய மொழி சப் டைட்டிலுடன் வெளியிடாமல் ரஷ்ய மொழியில் முழுப் படத்தையும் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். இப்படி இந்திய திரைப்படம் ஒன்று ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடுவது அரிதாக நடக்கும் நிகழ்வு.

ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் ரஷ்ய மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை யூடியூபில் ரசிகர்கள் பார்க்கலாம். மார்ச் 10-ஆம் தேதி கைதியின்  ரஷ்ய மொழி டப்பிங் ரஷ்யாவில் வெளியாக உள்ளது. கைதியை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. அவர்கள் தான் முயற்சி எடுத்து கைதியை ரஷ்ய மொழியில் வெளியிடுகின்றனர். இதன் மூலம் தமிழ் சினிமாவின் சந்தை மேலும் விரிவடையும்.

Gangai Amaran: தமிழ் சினிமாவில் மனம் வீசும் கங்கை அமரன் பாடல்கள்!

ரஷ்யர்கள் கைதியை எப்படி வரவேற்கப் போகிறhர்கள் என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Karthi

அடுத்த செய்தி