Home /News /entertainment /

கார்த்தி-ஜெயம் ரவி ஒன்றாக டின்னர்... வேகமெடுக்கும் பொன்னியின் செல்வன்!

கார்த்தி-ஜெயம் ரவி ஒன்றாக டின்னர்... வேகமெடுக்கும் பொன்னியின் செல்வன்!

கார்த்தி - ஜெயம் ரவி

கார்த்தி - ஜெயம் ரவி

மும்பையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார்த்தியும், ஜெயம் ரவியும் ஒரே ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டிருக்கிறார்கள்.

    நடிகர்கள் கார்த்தியும் ஜெயம் ரவியும் ரெஸ்டாரெண்ட் ஒன்றில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள காவிய திரைப்படம் பொன்னியின் செல்வன். மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளது. 10 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசு குடும்பத்தின் அதிகாரப் போராட்டம், பேரரசரின் வாரிசுகளுக்கிடையே ஏற்படும் வன்முறை பிளவு ஆகியவற்றை மையப்படுத்தி பொன்னியின் செல்வன் முதல் பாகம் உருவாகியுள்ளது.

    துணிச்சலான வீரர்கள், தந்திரமான உளவாளிகள் மற்றும் சூழ்ச்சியாளர்கள் அனைவரும் சோழ பேரரசை வெல்ல முயற்சிக்கும் ஒரு சாகசக் கதை இது. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான இப்படம் செப்டம்பர் 30, 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாலியல் புகார்களை விசாரிக்கும் குழு மலையாள சினிமாவில் கட்டாயம் - உயர் நீதிமன்றம் அதிரடி!

    படத்தின் பெருமளவு காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் கடலுக்கடியில் படமாக்க வேண்டியிருந்திருக்கிறது. ஆனால் கொரோனா தொற்றால் அனுமதி கிடைக்காமல் தள்ளிப்போனது. தற்போது அண்டர் வாட்டர் படப்பிடிப்பிற்கான அனுமதி மும்பையில் கிடைத்து விட, உடனே ஷூட்டிங்கிற்கு ரெடியாகியிருக்கிறது பொன்னியின் செல்வன் படக்குழு. தற்போது மும்பையில் அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. வந்தியத் தேவன் கப்பலிலிருந்து கடலில் குதித்து தப்பித்து ஓடும் காட்சி நேற்று படமாக்கப்பட்டிருக்கிறது. தவிர, கார்த்தி, ஜெயம் ரவி தொடர்பான பேட்ச் ஒர்க் சீன்களும் மும்பையில் படமாக்கப்பட்டன. இந்த பேட்ச் ஒர்க்கில் நடிகை ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றிருக்கிறார்.

    காத்திருப்பு முடிந்தது... குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

    மும்பையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார்த்தியும், ஜெயம் ரவியும் ஒரே ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். அங்கே எடுத்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஜெயம் ரவி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரே நாளில் படமாக்கப்பட்டதால், படப்பிடிப்பை முடித்து விட்டு, அவர் சென்னை திரும்பியிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Jayam Ravi, Actor Karthi, Mani ratnam

    அடுத்த செய்தி