ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யாவை வைத்து படம் இயக்க தயாராகும் கார்த்தி!

சூர்யாவை வைத்து படம் இயக்க தயாராகும் கார்த்தி!

சூர்யா - கார்த்தி

சூர்யா - கார்த்தி

தனக்கு சூர்யாவால் உதவ முடியும் என்பதால் அவருடன் பணியாற்றுவது மிகவும் எளிதானது என்றும் அவர் கூறினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் கார்த்தி தனது அண்ணன் சூர்யாவை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். 

  நடிகர் கார்த்தி தற்போது தனது 'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறார். அவரது அடுத்தப் படமான 'சர்தார்', அக்டோபர் 21-ஆம் தேதி வெளியாகிறது. ஸ்பை த்ரில்லர் கதை களத்தில் இந்தப் படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கார்த்தி. அதில் தான் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

  கார்த்தி நடிகராவதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் நடிகராகி ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த கார்த்தி, தற்போது ஒரு படத்தை இயக்க விரும்புவதாகவும், அதில் தனது சகோதரர் சூர்யாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இருப்பதாகவும் கூறினார். சூர்யாவைத் தவிர வேறு யாரும் தன்னை நம்ப மாட்டார்கள் என்பதால், கதாபாத்திரத்திற்காக எதையும் செய்யும் நடிகர்களில் சூர்யாவும் ஒருவர் என்பதாலும், அவரை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் அப்போது தெரிவித்தார்.

  இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் படத்தைப் பகிர்ந்த சின்மயி!

  மேலும் தொடர்ந்த கார்த்தி, சூர்யா தான் தன்னை சினிமாவில் வழிநடத்தியதாகவும், அவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்புவதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்றும் கூறினார். குழப்பத்தில் இருக்கும்போது தன்னை நன்றாக புரிந்துக் கொண்டு தனக்கு சூர்யாவால் உதவ முடியும் என்பதால் அவருடன் பணியாற்றுவது மிகவும் எளிதானது என்றும் அவர் கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உதவி இயக்குனராக இருந்த காலத்திலிருந்தே சூர்யாவை இயக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு எப்போதும் இருந்ததாகவும் கார்த்தி தெரிவித்தார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Karthi, Actor Suriya