முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கார்த்தி வீட்டில் விரைவில் மீண்டும் குவா குவா சத்தம்... மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

கார்த்தி வீட்டில் விரைவில் மீண்டும் குவா குவா சத்தம்... மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

கார்த்தி - ரஞ்சனி, புகைப்படம் - ட்விட்டர்

கார்த்தி - ரஞ்சனி, புகைப்படம் - ட்விட்டர்

நடிகர் கார்த்தி மீண்டும் அப்பாவாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Last Updated :

அமெரிக்காவில் திரைத்துறை சம்பந்தமாக படித்து முடித்த கார்த்தி இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான கார்த்தி, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பையா’, ‘மெட்ராஸ்’,‘காற்று வெளியிடை’, உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘சுல்தான்’, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கார்த்தி மீண்டும் அப்பாவாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் கார்த்திக்கும் - ரஞ்சனிக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2013-ம் ஆண்டு இத்தம்பதிக்கு உமையாள் என்ற பெண்குழந்தை பிறந்தது. தற்போது 7 ஆண்டுகள் கழித்து கார்த்தியின் மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் மகன் மாரடைப்பால் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்

top videos

    கர்ப்பத்திற்கு பின்னர் முதல் மூன்று மாதங்கள் சென்னையில் தங்கியிருந்த கார்த்தி - ரஞ்சனி தம்பதி, மே மாதத்தில் ரஞ்சனியின் சொந்த ஊரான கவுண்டம்பாளையத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த ரசிகர்கள் கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    First published:

    Tags: Actor Karthi, Kollywood