Karthi: மீண்டும் கொம்பன் முத்தையா இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி!

முத்தையா - கார்த்தி,

முத்தையா படம் என்றால் என்னென்ன இருக்கும் என ரசிகர்களே பட்டியல் தயாரிக்கும் அளவுக்கு இலகுவாக யூகிக்கும்படி அவரது படங்கள் அமைந்தன.

  • Share this:
    பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் கார்த்தி, அடுத்து முத்தையா இயக்கத்தில் நடிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

    குட்டிப்புலி படத்தின் மூலம் இயக்குனரானவர் முத்தையா. குறிப்பிட்ட இனத்தின் வாழ்க்கை வரலாற்றை அவர்களின் சடங்கு சம்பிரதாயங்களுடன் சொல்வதில் வல்லவர் என்ற பெயரை முதல் படத்திலேயே பெற்றார் முத்தையா. அவரது இரண்டாவது படம் கொம்பனில் கார்த்தி நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றது. அடுத்து விஷால் நடிப்பில் இயக்கிய மருது படமும் முதலுக்கு மோசமில்லாமல் ஓடியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முத்தையாவின் பலமே இந்த மூன்று படங்களுக்குப் பின் பலவீனமானது. முத்தையா படம் என்றால் என்னென்ன இருக்கும் என ரசிகர்களே பட்டியல் தயாரிக்கும் அளவுக்கு இலகுவாக யூகிக்கும்படி அவரது படங்கள் அமைந்தன. கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி என அவாரது அடுத்த மூன்று படங்களும் தோல்வியடைந்தன. இந்நிலையில், மீண்டும் அவர் கார்த்தியை இயக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பொன்னியின் செல்வனில் நடித்துவரும் கார்த்தி, அப்படம் முடிந்ததும் முத்தையா இயக்கத்தில் நடிப்பதாகவும், அது முடிந்த பிறகே பி.எஸ்.மித்ரனின் சர்தார் படத்தை முடிப்பார் எனவும் கூறப்படுகிறது. முத்தையா, கார்த்தி இணையும் படத்தை கொம்பனை தயாரித்த ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீனே தயாரிக்கவும் வாய்ப்புள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: