ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விருமன் படப்பிடிப்பு நிறைவு - சூர்யாவுக்கு நன்றி சொன்ன கார்த்தி!

விருமன் படப்பிடிப்பு நிறைவு - சூர்யாவுக்கு நன்றி சொன்ன கார்த்தி!

விருமன்

விருமன்

விருமன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்துள்ள கார்த்தி, அதன் புகைப்படங்களையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விருமன் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக நடிகர் கார்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கொம்பன்'. நடிகர் கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். கிராமத்து கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து 'விருமன்' படத்தின் மூலம் முத்தையா - கார்த்தி கூட்டணி இணைந்துள்ளது.

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை வட்டாரங்களில் நடைப்பெற்றது.

இந்நிலையில் தற்போது விருமன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்துள்ள கார்த்தி, அதன் புகைப்படங்களையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், ’மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால் படபிடிப்பை நடத்தி உள்ளனர் இயக்குநர் முத்தையாவும் , ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும். என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது, யதார்த்தமானவர். அவருடன் நடித்த நாள்கள் ஜாலியானவை. மீண்டும் ’விருமன்’ மூலம் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்ததில் சந்தோஷம். படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சூர்யா அவர்களுக்கும் நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க - மாநாடு வெற்றி விழாவை புறக்கணித்த சிம்பு... என்ன தான் பிரச்னை?

கார்த்தியின் இந்த ட்வீட்டுக்கு ‘நன்றி ஹீரோ சார்’ என பதிலளித்திருக்கிறார் சூர்யா.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Karthi, Tamil Cinema