இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கப்போகும் நான்காவது படத்தின் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களால், இயக்குனர் மாரி செல்வராஜ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது இயக்கத்தில் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரு படங்கள் வெளிவந்துள்ளன. இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றன.
பரியேறும் பெருமாள் படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனம் ஈர்த்தது. தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் திரைப்படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதன் பின்னர் வெளியான கர்ணன் திரைப்படமும் சர்ச்சைகளை உண்டாக்கி, மிகப் பெரும் வெற்றியை பதிவு செய்தது. கர்ணன் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். ரஜிஷா விஜயன், நட்டி நட்ராஜ், யோகிபாபு உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றிருந்தார்கள். தேனி ஈஸ்வர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இதில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு பாராட்டை பெற்றது.
டிசம்பர் வெளியீட்டை தவிர்த்தது சிம்புவின் ‘பத்து தல’… புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு…
கொரோனாவுக்கு மத்தியில் கிடைத்த இடைவெளியில் கர்ணன் திரைப்படம் கடந்த 1021 ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட்டானது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கும் இசை அமைத்திருந்தார். இரு படங்களும் சூப்பர் ஹிட்டான நிலையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து, மாரி செல்வராஜ் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
காதலியுடன் ரூ. 100 கோடி வீட்டில் குடியேறப் போகும் ஹிருத்திக் ரோஷன்… பாலிவுட்டில் பரபரப்பு…
இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
Tomorrow M4 🧒🧒 pic.twitter.com/Io5MeDcDT3
— Mari Selvaraj (@mari_selvaraj) November 20, 2022
இந்நிலையில் தான் இயக்கப்போகும் அடுத்த படத்தின் அறிவிப்பை நாளை வெளியிடப்போவதாக மாரிசெல்வராஜ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அல்லது கலையரசன், நிகிலா விமல் நடிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டார் தயாரிக்கும் படத்தின் அறிவிப்பாக இருக்கலாம் என்று இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mari selvaraj