ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கர்நாடகாவில் பெரும் பிரச்சனையை சந்திக்கும் பொன்னியின் செல்வன் படம்!

கர்நாடகாவில் பெரும் பிரச்சனையை சந்திக்கும் பொன்னியின் செல்வன் படம்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கர்நாடகாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும் என்று கர்நாடக திரை உலகினர் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. 

    மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது.

    இந்த திரைப்படத்தை கர்நாடக மாநிலத்திலும் ஏராளமான திரையரங்குகளில் திரையிட்டுள்ளனர். அத்துடன் பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்களின் வருகை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கன்னடத்தில் Kantara என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதன் காரணமாக Kantara  திரைப்படத்துக்கு அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அத்துடன்  பொன்னியின்  திரைப்படத்திற்கான முக்கியத்துவத்தை குறைத்து, அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள திரையரங்குகளை Kantara படத்திற்கு ஒதுக்க வேண்டும் என கன்னட திரை உலகத்தினர் அங்குள்ள திரையரங்கு உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என கூறப்படுகிறது.

    Also read... சரத்குமாரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினி - காரணம் இதுதான்!

    கர்நாடகாவில் பொன்னியின் செல்வன் நல்ல வசூலை ஈட்டி வரும் நிலையில் தற்போது புதிய சிக்கலை சந்தித்துள்ளது. கர்நாடக திரையுலகினரின் அழுத்தத்தை அங்குள்ள திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது சந்தித்து வருகின்றனர்.

    யஷ் நடிப்பில் கன்னடத்தில் உருவான கே.ஜி.எஃப்-2  திரைப்படம் தமிழகத்தில் வெளியாகி பெரும் வெற்றி அடைந்தது. அதுவும் விஜய் படத்திற்கு இணையாக 117 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Ponniyin selvan