கர்நாடக ரசிகர்கள் ட்விட்டரில் #BoycottRRRinKarnataka என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் மூலம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
RRR படக்குழு தற்போது இந்தியா முழுவதும் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதற்காக பெங்களூரு, ஹைதராபாத், துபாய், பரோடா, டெல்லி, ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய இடங்களுக்குச் செல்ல ஆர்.ஆர்.ஆர் நட்சத்திரங்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான RRR சமீபமாக தலைப்புச் செய்தியாக வலம் வருகிறது. இப்படம் வரும் மார்ச் 25, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையே கர்நாடகாவில் கன்னட மொழியில் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகாததற்கு அதிருப்தியை தெரிவிக்கும் நோக்கில், கர்நாடக ரசிகர்கள் ட்விட்டரில் #BoycottRRRinKarnataka என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இன்று காலை முதலே ஏராளமான சமூக ஊடகப் பயனர்கள் ட்விட்டர் தளத்திற்குச் சென்று #BoycottRRRinKarnataka என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு ட்வீட் செய்து வருகின்றனர். அதில், கர்நாடகாவில் RRR திரைப்படம் கன்னட மொழியில் வெளியாகவில்லை என்றும், இது கன்னடர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமானம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?
Pandian Stores: முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் - நன்றி சொன்ன குழுவினர்!
கன்னட மொழியில் படத்தை வெளியிடாததற்காக ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடித்த ஆர்ஆர்ஆர் தயாரிப்பாளர்கள் மீது கன்னட ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்தி மற்றும் தமிழில் மட்டும் முன்பதிவு காட்டும் செயலியின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்த ஒரு பயனர், “இது கன்னடர்களுக்கு பெரும் அவமானம், கர்நாடகாவில் RRR திரைப்படத்தை தடை செய்யும் நேரம் இது, படம் கன்னடத்தில் இருந்தால் மட்டுமே வரவேற்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு பலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.