Home /News /entertainment /

James: புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் வெளியீடு... வரி விலக்கு கோரும் காங்கிரஸ்!

James: புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் வெளியீடு... வரி விலக்கு கோரும் காங்கிரஸ்!

புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமார்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடித்துள்ள கடைசி படமான ஜேம்ஸ் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள ஜேம்ஸ் படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

    விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. 80-களின் பிற்பகுதியிலும் 90-களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதையை களமாக கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது.

    காஷ்மீரி இந்துக்களை பரிசுத்தமானவர்களாகவும், இஸ்லாமியர்களை சாத்தான்களாகவும் சித்தரித்திருக்கும் இப்படம் ஒருபக்கம் வரவேற்பையும், மறுபுறம் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அதோடு தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் வரலாறு திரித்துக் கூறப்பட்டிருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு கர்நாடக அரசு வரி விலக்கு அளித்துள்ளது.

    Bharathi Kannamma: பெற்றோர் திருமணத்துக்கு திட்டம் தீட்டும் ஹேமா... லட்சுமியின் முடிவு என்ன?

    இதற்கிடையே மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடித்துள்ள கடைசி படமான ஜேம்ஸ் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமென கர்நாடக காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.



    அஜித் பாடலுக்கு நடுரோட்டில் கயல் சீரியல் நடிகை சைத்ரா வெறித்தனமான ஆட்டம்!

    இது குறித்து அக்கட்சியின் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ”நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்துள்ள ஜேம்ஸ் படம் நாளை (இன்று) வெளியாகிறது. அந்த படத்தை காண அவரது ரசிகர்கள் உள்பட மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதனால் மாநில அரசு அவரது படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Puneet Rajkumar

    அடுத்த செய்தி