கன்னட மொழியில் உருவான 777 சார்லி படத்தை பார்த்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கன்னட சினிமாத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் ரக்சித் ஷெட்டி. இவரது நடிப்பில் பல வித்தியாசமான படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன.
அந்த வகையில் தற்போது 777 சார்லி என்ற படம் ரக்சித் ஷெட்டியின் நடிப்பில், கிரண் ராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழிலும் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் திரையிடப்படும் திரைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - அழகில் ஹீரோயின்களை மிஞ்சும் பாடகி ஜொனிதா காந்தி
ஒரு நாய்க்கும், உறவுகள் இல்லாத இளைஞனுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை விவரிக்கும் படமாக 777 சார்லி வெளிவந்திருக்கிறது. இந்த படத்தில் தமிழ் நடிகர் பாபி சிம்ஹா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு 777 சார்லி படத்தின் சிறப்பு காட்சி இன்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. இதைப் பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொம்மை, இறந்து போன தனது நாயை இந்தப் படம் நினைவு படுத்தியதாக கூறினார்.
பின்னர் பேசிக் கொண்டிருக்கும்போதே உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க - ‘சினிமாடிக்கெட் விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்’ - தயாரிப்பாளர்கள் கோரிக்கை
இதற்கிடையே, 777 சார்லி படத்திற்கு இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் போனி கபூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மிகச்சிறந்த கதையம்சம் கொண்ட படங்கள், அதற்கான பார்வையாளர்களை ஈர்த்து விடும். அந்த வகையில் ரக்சித் ஷெட்டி, கிரண்ராஜ் உருவாக்கத்தில் வந்துள்ள 777 சார்லி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்திருக்கிறது என்று போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.