Karnan: ’கர்ணன் எல்லோர் மனதையும் வெல்வான்’ பா.ரஞ்சித்!

பா.ரஞ்சித் - கர்ணன்

கர்ணன் படத்தை கொண்டாடுவோம் என்று இயக்குநர் ரஞ்சித் தனது முதல் கருத்தை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    கர்ணன் படத்தை கொண்டாடுவோம் என்று இயக்குநர் ரஞ்சித் தனது முதல் கருத்தை வெளியிட்டுள்ளார்.

    பரியேறும் பெருமாள் என்ற சிறந்த அரசியல் படத்தை தந்த மாரி செல்வராஜின் இரண்டாவது படம் கர்ணன். தனுஷ் நடிப்பில், தாணு தயாரித்திருக்கும் இப்படம், திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு காரணமாக இன்று வெளியாகுமா என்ற சந்தேகம் இருந்தது. திட்டமிட்டபடி கர்ணன் வெளியாகும் என்று ரசிகர்களின் சந்தேகத்தை தாணு போக்கினார். அவர் சொன்னபடி இன்று கர்ணன் தமிழகமெங்கும் வெளியானது.



    சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் மாரி செல்வராஜ், தாணு, படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்பட கர்ணன் படக்குழுவினர், ரசிகர்களுடன் முதல்காட்சியை கண்டு களித்தனர். படம் மிகச்சிறந்த விமர்சனத்தை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. முதல்காட்சி பார்த்த இயக்குநரும், பரியேறும் பெருமாளை தயாரித்தவருமான ரஞ்சித், ட்விட்டரில் படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    "கர்ணன் எல்லோர் மனதையும் வெல்வான். மாரி செல்வராஜின் வியக்கத்தக்க திரைமொழி, தனுஷின் அபாரமான நடிப்பு, சந்தோஷ் நாராயணனின் இசை மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞசர்களின் அசாத்திய வேலைப்பாடும் மிகவும் பாராட்டுக்குரியது. துணை நின்ற தயாரிப்பாளர் தாணு அவர்களுக்கு நன்றிகள். கொண்டாடுவோம்!" என்று அவர் கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: