"கர்ணன், வக்கீல் ஸாப்” படங்களின் வெளிநாட்டு வசூல் நிலவரம்!

"கர்ணன், வக்கீல் ஸாப்” படங்களின் வெளிநாட்டு வசூல் நிலவரம்!

கர்ணன் - வக்கீல் சாப்

நேற்று தமிழில் கர்ணனும், தெலுங்கில் வக்கீல் ஸாப்பும் வெளியாயின. இரண்டும் முக்கியமான திரைப்படங்கள். கர்ணன் தனுஷுக்கும், மாரி செல்வராஜுக்கும் மைல்கல்லாக அமைந்துள்ளது. பல தேசிய விருதுகளை கர்ணன் வெல்லும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

  • Share this:
    நேற்று தமிழில் கர்ணனும், தெலுங்கில் வக்கீல் ஸாப்பும் வெளியாயின. இரண்டும் முக்கியமான திரைப்படங்கள். கர்ணன் தனுஷுக்கும், மாரி செல்வராஜுக்கும் மைல்கல்லாக அமைந்துள்ளது. பல தேசிய விருதுகளை கர்ணன் வெல்லும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

    வக்கீல் ஸாப் இந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக். ஹீரோவாக நடித்திருப்பது பவன் கல்யாண். 3 வருடங்களுக்குப் பிறகு வெளியான பவன் கல்யாண் படம் என்பதால், ரசிகர்கள் திரையரங்கை மொய்க்கிறார்கள்.

    இவ்விரு படங்களும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வெளியாகியுள்ளன. முதல்நாளில் கர்ணன் ஆஸ்திரேலியாவில் 36 இடங்களில் வெளியானது. அங்கு முதல்நாள் வசூல் 37,815 ஆஸ்திரேலியன் டாலர்கள். நமது ரூபாயில் சுமார் 21.54 லட்சங்கள். இதையடுத்து ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் கர்ணனுக்கு 12-வது இடம் கிடைத்துள்ளது. வக்கீல் ஸாப் ஆஸ்திரேலியாவில் 55 இடங்களில் வெளியாகி 1,47,571 டாலர்களை வசூலித்துள்ளது. நமது ரூபாயில் சுமார் 84.07 லட்சங்கள். பாக்ஸ் ஆபிஸில் 7 வது இடத்தை பிடித்துள்ளது.

    நியூசிலாந்தில் கர்ணன் நேற்று 9 இடங்களில் வெளியாகி 4,991 டாலர்களை வசூலித்துள்ளது. இது சுமாராக 2.62 லட்சங்கள். நியூசிலாந்து பாக்ஸ் ஆபிஸில் 13-வது இடம் கர்ணனுக்கு கிடைத்துள்ளது. அங்கு வக்கீல் ஸாப் 13 இடங்களில் வெளியாகி 1,0667 டாலர்களை வசூலித்துள்ளது. இது சுமார் 5.61 லட்சங்கள். பாக்ஸ் ஆபிஸில் அதே 7 வது இடம்.

    இரண்டு படங்களில் வக்கீல் ஸாப் முன்னிலையில் உள்ளது. இது எதிர்பார்த்ததே. யுஎஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழைவிட தெலுங்குப் படங்களே அதிகம் வசூலிக்கின்றன. எனினும் கர்ணன் குறிப்பிடத்தகுந்த வசூலை இந்த கொரோனா காலத்தில் பெற்றுள்ளது ஆச்சரியமே.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: