தனுஷின் ‘கர்ணன்’ டீசர் வெளியீட்டு நேரம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'பரியேறும் பெருமாள்' மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷின் 41 வது திரைப்படமான ’கர்ணன்’ உலகளவில் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.
மார்ச் 23 ஆம் தேதி 'கர்ணன்' டீஸர் வெளியிடப்படும் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் இது குறித்த புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு 7.01 மணிக்கு டீஸர் வெளியாகும் என்ற புதிய அப்டேட்டுடன், புதிய போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதனை தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
'கர்ணன்' படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்தில் தனுஷ், ராஜீஷா விஜயன், லால், அழகம் பெருமாள், லட்சுமிப்ரியா சந்திரமெளலி, யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம் கெளரி கிஷன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 9-ஆம் தேதி திரைக்கு வருகிறது.