• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Karnan: ’தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டால் என்ன?’ முடிவுக்கு வந்த கர்ணன் சர்ச்சை

Karnan: ’தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டால் என்ன?’ முடிவுக்கு வந்த கர்ணன் சர்ச்சை

தனுஷ் உடன் மாரி செல்வராஜ்

தனுஷ் உடன் மாரி செல்வராஜ்

’கர்ணன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘பண்டாரத்தி’ என்ற பாடல், இனி ‘மஞ்சனத்தி’ என்றழைக்கப்படும் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ’கர்ணன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘பண்டாரத்தி’ என்ற பாடல், இனி ‘மஞ்சனத்தி’ என்றழைக்கப்படும் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

  பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கி வரும் படம் ‘கர்ணன்’. இதில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் கர்ணன் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

  Cook With Comali: ‘குக் வித் கோமாளி’ வைல்ட் கார்டில் எண்ட்ரியான ஃபேவரிட் நட்சத்திரங்கள்!

  குறிப்பாக இதில் 'பண்டாரத்தி புராணம்' என்ற பெயரில் பாடலொன்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாகக் கூறி, இதனைப் படத்திலிருந்தும், இணையத்திலிருந்தும் நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மாரி செல்வராஜ்.  அதில், “அனைவருக்கும் அன்பின் வணக்கம். கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை, நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும், எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான், சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும் தான், நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன்.

  Vignesh Shivan-Nayanthara: நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிச்சயதார்த்தம்? வைரலாகும் படம்!

  பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக, அக்காவாக, ஆச்சியாக, பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து, காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது, புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக, இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

  தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன... பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்...
  காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்” என்று தெரிவித்திருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: