• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Karnan Review: 'தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது நிச்சயம்’!

Karnan Review: 'தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது நிச்சயம்’!

கர்ணன்

கர்ணன்

தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள்.

 • Share this:
  தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள்.

  'பரியேறும் பெருமாள்' மாரி செல்வராஜ், தனுஷின் 41 வது திரைப்படமான ’கர்ணன்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 'கர்ணன்' படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்தில் தனுஷுடன் இணைந்து, ராஜீஷா விஜயன், லால், அழகம் பெருமாள், லட்சுமிப்ரியா சந்திரமெளலி, யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், கெளரி கிஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

  இந்நிலையில் ‘கர்ணன்’ படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

  ”கர்ணனுக்கு 5 நட்சத்திரங்கள். படத்தின் மீதான ஹைப் உண்மையானது. வர்க்கப் பிளவு மற்றும் ஒருவரின் அடையாளத்திற்காக போராடுவதைப் பற்றி மிகவும் சக்திவாய்ந்த படம். படத்தின் முடிவில், நீங்கள் உள்ளுக்குள் நடுங்குவீர்கள். உங்களுக்கு வார்த்தைகள் வராது. மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் பல ஆண்டுகளாக நினைவில் கொள்ளும் வகையில் ஒரு படத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள்” என இவர் தெரிவித்துள்ளார்.  ”கர்ணன்: தனுஷின் அழகு. அவர் தன்னை சுற்றியுள்ள சாதாரண கிராம மக்களுடன் மிக எளிதாக கலக்கிறார். அவரது மெலிதான இளம் தோற்றத்திற்கு அடியில், கர்ணன் வெடிக்க காத்திருக்கும் ஒரு எரிமலையாக தெரிகிறது. அனைத்து துணை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். வி கிரியேஷன்ஸ் பெருமை கொள்ளும் தருணம்” என இந்த பயனர் குறிப்பிட்டுள்ளார்.  கர்ணன் சிறந்த இடைவேளையைக் கொண்டுள்ளது.

  அசுரன் இடைவேளை = கர்ணன் இடைவேளை  மாரி செல்வராஜை எழுந்து நின்று பாராட்டலாம்.  ’உட்ராதீங்க யப்போவ்’ பாடலுக்கு ஃப்ளாஷ் லைட். தலைவா படம் வெறி - என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.  'கர்ணன் பிரமிக்க வைக்கும் படம்’  கர்ணன் உங்களுக்குள் செல்ல சிறிது நேரம் ஆகும், ஆனால் சென்றவுடன், அது மிகவும் மிருகத்தனமான உருவத்தின் காரணமாக இடைவிடாமல் மாறுகிறது. மாரி செல்வராஜ் ஒரு தேசிய புதையல். அவரையும் படத்தையும் விரும்புங்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டும்.  ”கர்ணன் சிறப்பான ஓபனிங். எல்லா இடங்களிலும் நேர்மறையான விமர்சனங்கள். பிளாக்பஸ்டர் போல் தெரிகிறது.” என இவர் தெரிவித்துள்ளார்.  கர்ணன் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் "மாஸ்டர் பீஸ்" - தனுஷ் கரியரில் சிறந்த திரைப்படம்!
  5-க்கு 5 மதிப்பெண். கண்டிப்பாக பார்க்க வேண்டும்! சொல்ல வார்த்தைகளே இல்லை! நிச்சயமாக மற்றொரு தேசிய விருது கிடைக்கும்! ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுப்பது ஒரு கலை என்றால், தனுஷ் அதில் பிக்காசோ! இனிமேல் தனுஷ்க்கு ‘ஜீரோ’ ஹேட்டர்ஸ் இருப்பார்கள்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: