• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படமாக கர்ணன் தேர்வு

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படமாக கர்ணன் தேர்வு

கர்ணன்

கர்ணன்

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக கர்ணன் தேர்வு செய்யப்பட்டது.

  • Share this:
    பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது. அதன் நிறைவு விழாவில் சிறந்த திரைப்படமாக கர்ணன் தேர்வு செய்யப்பட்டது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் கொடியங்குளத்தில் நடைபெற்ற காவல்துறையின் அத்துமீறல்கள் மையமாக வைத்து உருவாகி இருந்தது. இதே விழாவில் சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை இதுவரை திரையரங்கில் வெளியாகாத கட்டில் திரைப்படம் பெற்றது.

    நடிகர், இயக்குநர், கவிஞர் எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் இ.வி.கணேஷ்பாபு. தமிழ் சினிமாவில் ஆட்டோகிராஃப், கற்றது தமிழ், சிவகாசி, அறை எண் 305-ல் கடவுள், ஆனந்தபுரத்து வீடு, மொழி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் கட்டில் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுத கட்டில் படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: