கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ

Youtube Video

தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் 9-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து திரையரங்கில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது கர்ணன். 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி இருந்திருந்தால் இன்னும் அதிக வசூலைப் பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒருபக்கம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரைபிரபலங்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டினார்கள். இந்நிலையில் கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

5 நிமிடங்கள் கால அளவு கொண்ட அந்த வீடியோவில் கர்ணன் உருவான விதத்தை காட்சிகளாக விவரித்துள்ளது படக்குழு. மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷ் தொடங்கி தனது கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் எப்படி துல்லியமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்களிடம் நடித்துக் காட்டி மெனக்கெட்டிருப்பது தெரிய வருகிறது.



‘கர்ணன்’ படத்தை அடுத்து துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதல் இரண்டு படங்களிலிருந்து வித்தியாசப்படும் விதமாக கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி மாரி செல்வராஜ் தனது மூன்றாவது படத்தின் கதையை அமைத்துள்ளதாகவும் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: