கலைக்கு எல்லை இல்லை, அதை எதற்குள்ளும் சுருக்கி விட முடியாது என்பார்கள். கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தி அதை எந்த வடிவிலும் ரசிக்க வைக்க முடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் சுயதீன கலைஞர் சீவக வழுதி தான்... கோவையைச் சேர்ந்த இவர், ஆணியில் கமல் ஹாசனையும், ஸ்டேப்ளர் பின்களால் கர்ணன் தனுஷையும் வரைந்து ’இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ இடம் பெற்றிருக்கிறார்.
சீவக வழுதியை தொடர்புக் கொண்டு பேசினோம்... “நான் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் முதுகலை ஜர்னலிஸம் அண்ட் மாஸ்கம்யூனிகேஷன் படித்தேன். கலை மீது கொண்ட ஆர்வத்தால் தான் இந்தப் படிப்பில் சேர்ந்தேன். பிறகு 6 ஆண்டுகள் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி விட்டு, கலை மீது கொண்ட காதலால் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்” என தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார் சீவக வழுதி. அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
புது வித கலைகளை செய்வதற்கான இன்ஸ்பிரேஷன் எங்கிருந்து வருகிறது?
கலை என்பது கடல் மாதிரி. அடிப்படை விஷயங்களுடன் நமது கிரியேட்டிவிட்டியை சேர்த்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஸ்டேப்ளர் ஆர்ட் நம்மூரில் அவ்வளவாக தெரியாது. வெளிநாடுகளில் இது பிரபலமானது. இந்த மாதியான விஷயங்களை செய்து முடிக்க நிறைய நேரம் பிடிக்கும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடினமான சூழலை கடக்க வேண்டியிருக்கும். நிறைய பேருக்கு திறமைகள் இருக்கிறது. இந்த மாதிரியும் செய்ய முடியும் என அவர்களுக்கு சொல்லும் பொருட்டு, நான் புதுமையான விஷயங்களை முயற்சி செய்து வருகிறேன்.
இந்த ஸ்டேப்ளர் ஆர்ட்டை செய்து முடிக்க எவ்வளவு நாட்களானது?
தினமும் 4-5 மணி நேரம் வீதம் ஒரு மாதமானது. ஸ்டேப்ளர் பின் எல்லாமே கைகளால் அடித்ததால், கொஞ்ச நேரத்திலேயே கை வலிக்க ஆரம்பிக்கும். இருந்தாலும் கலை என்ற விஷயம் அந்த வலிகளை மறக்கச் செய்து விடும்.
உங்கள் புதிய முயற்சியில் ’கர்ணன் தனுஷ்’ படத்தை வரைவதற்கான நோக்கம்?
ஏப்ரல் 9-ம் தேதி முதல் நாள் இறுதிக்காட்சியில் ‘கர்ணன்’ படம் பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வெளியில் வரும் போதே, தனுஷ் சாருக்காக இதை நான் செய்யனும் என முடிவு பண்ணி விட்டேன். என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் ‘கர்ணன்’. ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட நிறைய பேரை பார்த்திருப்போம். இருந்தாலும், கர்ணன் படத்தில் சொல்லப்பட்டது மனதை என்னவோ செய்தது. அதனால் 10 லட்சம் ஸ்டேப்ளர் பின்களால் கர்ணன் தனுஷை உருவாக்கினேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆணியில் கமல் ஹாசனை வரைந்தது பற்றி?
நான் கமல் சாரின் தீவிர ரசிகன். ஆணியில் அவரை வரைந்து அவரது பிறந்த நாளுக்கு பரிசளித்தேன். ஆணி மற்றும் ஸ்டேப்ளர் என இரண்டு ஆர்ட்டிலும் ’இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ இடம் பெற்றிருக்கிறேன்.
கர்ணன் தனுஷை தனுஷ் பார்த்தாரா?
மாரி செல்வராஜ் சார் பாத்துட்டு பாராட்டினார், ரொம்ப சந்தோஷப்பட்டார். திறமைக்கு வாழ்த்துகள்ன்னு சொன்னார். தனுஷ் சாருக்கு அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார். தாணு சார் இதை ட்விட்டரில் பதிவிட்டு வாழ்த்தினார்.
வீட்டில் என்ன சொல்கிறார்கள்?
சின்ன வயதிலிருந்தே அவர்கள் தரும் ஊக்கத்தில் தான் என்னால் தொடர்ந்து இயங்க முடிகிறது. எல்லாரும் ரொம்பவும் சப்போர்டிவானவர்கள். இந்த முயற்சிகளை நான் மேற்கொள்ளும் போது, படம் / வீடியோ எடுத்து என சகோதரர் எனக்கு உதவியாக இருந்தார்.
கடைசியாக, உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே?
அப்பா ரொம்ப தமிழ் பற்று கொண்டவர். குடும்பத்தில் எல்லாருக்கும் சுத்த தமிழ் பெயர் தான்!
சீவக வழுதியின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து சொல்லி விடைப்பெற்றோம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dhanush