திரைப்படமாகும் ’ஒலிம்பிக் நாயகி’ கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை

பளு தூக்குதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திரைப்படமாகும் ’ஒலிம்பிக் நாயகி’ கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை
கர்ணம் மல்லேஸ்வரி
  • Share this:
பளு தூக்குதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பெண்கள் பளு தூக்கும் பிரிவில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றார். மேலும் பளு தூக்குதலில் உலக சாம்பியனாக திகழ்ந்த இவர் 25-க்கும் அதிகமான சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.

இன்று இவரது பிறந்த நாளை முன்னிட்டு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மல்லேஸ்வரியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது என்பது தான் அந்த அறிவிப்பு. ராஜூகாடு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சஞ்சனா ரெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார். எம்.வி.வி சினிமா மற்றும் கோனா வெங்கட் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கோனா வெங்கட்டே திரைக்கதை எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் உருவாகிறது


படத்தின் நடிகர்,  நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க:’காட்மேன்’ வெப்சீரிஸ் வெளியீடு ஒத்திவைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு








First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading